ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம்; சீன நீதிமன்றம் அங்கீகரித்து தீர்ப்பு!

சீனாவில் ஓரினச் சேர்க்கையாளர் திருணத்துக்கு அந்நாட்டு நீதிமன்றம் அங்கீகாரம் வழங்கி தீர்ப்பளித்துள்ளது. 


தனது ஓரினச் சேர்க்கைத் திருமணத்தை பதிவு செய்ய மறுத்த ஃபுரோங் மாகாண அரசுத் துறை மீது சன் வென்லின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தொடுத்த வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இது தொடர்பில் சன் வென்லின் கூறியதாவது, “எனக்கும், மற்றோர் ஆணுக்கும் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற திருமணத்தைப் பதிவு செய்ய அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். திருமணச் சட்டத்தின்படி ஒரு ஆணும், பெண்ணும்தான் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

எனினும், அந்தச் சட்டத்தில் ‘கணவனும், மனைவியும்’ என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறது, ‘ஆணும், பெண்ணும்’ என்ற சொற்கள் இடம்பெறவில்லை என்பதை சுட்டிக்காட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.
எனது வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, எங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய உத்தரவிட்டது.” என்றுள்ளார்.

Related Posts:

«