கங்னாம் ஸ்டைல் போன்று பிறகு யூடியூப்பில் சென்சேஷனல் ஆகிவரும் Harlem Shake

கங்னாம் ஸ்டைலுக்கு பிறகு தற்போது சூடுபிடித்திருக்கும் யூடியூப் ஹாட் டாபிக் Harlem Shake எனும் இசையும் நடனமும் ஆகும்.


கடந்த பிப்.02ம் திகதி ‘Do the Harlem Shake’ எனும் பெயரில் ஒருவர் வித்தியாசமான இசை, நடனம் அடங்கிய வீடியோ ஒன்றை ஐந்து ஆஸ்திரேலிய இளைஞர்கள் வெளியிட்டார்கள். அதிலிருந்து பலருக்கும் பைத்தியம் பிடிக்க வைத்திருக்கிறது இந்த Harlem Shake Dance.

அமெரிக்க டீ.ஜே Baauer என்பவர் உருவாக்கிய Harlem Shake எனும் இசைப்பாடல் கடந்த வருடம் மே மாதம் வெளிவந்தது. அதிலிருந்து 19 செக்கன் கொண்ட டிஜிட்டல் இசையை மட்டும் எடுத்து, 2001 இல் வெளிவந்த இசைப்பாடல் ஒன்றின் புதிய வகை நடனத்தை கொண்டு, அந்த ஆஸ்திரேலிய இளைஞர்கள் இவ்வீடியோவை வெளியிட்டார்கள். அப்போதிலிருந்து அதே உக்தியை பலரும் பின்பற்ற தொடங்கிவிட்டார்கள்.

இதன் கான்செப்ட் என்னவெனில் Harlem Shake இசைக்கு பொதுவிடம் ஒன்றில் முதலில் ஒருவர் ஆடிக்கொண்டிருப்பார். அருகில் இருப்பவர்கள் தத்தமது வேலைகளை பார்த்து கொண்டிருப்பார்கள். திடிரேன இசை பீட் கொஞ்சம் மாறியதும், சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் ஆடத்தொடங்கிவிடுவார்கள்.

கல்லூரிகள், இராணுவம், தொழிற்சாலைகள், பெருந்தெருக்கள், நகர மையங்கள் என எல்லா இடத்திலும் இந்த வெறித்தனமான நடனம் பிரபலமாகிவிட்டது. தற்போது யூடியூப்பில் பல வேர்ஷனாக வெளிவரத்தொடங்கியிருக்கும் இந்த Harlem Shake நடனங்களில் பெரும்பாலானவை வக்கிரமானவையாக இருப்பது கவலைக்குரியது.

கங்னாம் ஸ்டைல் பாடலிலில் கங்னாம் என்பது எப்படி ஒரு தென்கொரிய நகரமோ, அதே போல் Harlem Shake பாடலில் Harlem என்பது அமெரிக்காவின் நியூயோர்க்கில் அருகில் இருக்கும் ஆபிரிக்கர்கள் அதிகமாக வாழும் ஒரு நகரமாகும்.

பிப்.02 ஆஸ்திரேலிய இளைஞர்கள் வெளியிட்ட Harlem Shake ஒரிஜினல் வீடியோ


பின்னர் வெளிவர தொடங்கிய பல்வேறு வேர்ஷன்களில் ஒரு சில :
இவற்றையும் காண்க :

Related Posts:

«