கபடிப்போட்டியில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்கள்!


அண்மையில் தேசிய மட்டத்தில் பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற 15 வயதிற்குட்பட்ட வீரர்களுக்கான கபடிப்போட்டியில் மன்னார் கட்டையடம்பன் மளுவராயர் றோமன் கத்தோழிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளனர்.

குறித்த தேசிய சாதனையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா நேற்று (16) மளுவராயர் கட்டையடம்பன் புனித செபமாலை அன்னை ஆலயத்தில் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது கபடிப்போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைத்து மன்னார் மாவட்டத்திற்கு பெறுமையை பெற்றுக்கொடுத்த மாணவர்கள் மற்றும் பயிற்சி ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

குறித்த கௌரவிப்பு நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் அருட் கலாநிதி கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை மற்றும் சிறப்பு விருந்தினர்களாக பெண்கள் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உட்பட பல அரசியல் வாதிகள் மற்றும் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Related Posts:

«