கபாலி படத்துக்கு குடும்பத்தோடு போகாதீங்க.. ஏமாற்றம் தான் மிஞ்சும்

உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் மத்தியில் இந்த வாரம் அதிகம் உச்சரிக்கப்பட்ட வார்த்தை கபாலி. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் இப்படத்துக்கு தயாரிப்பாளர் தாணுவின் ப்ரோமோஷன் அனைவரையும் எதிர்பார்ப்பின் உச்சத்துக்கு கொண்டு சென்றது.

ஆனால் நேற்று வெளியான இப்படத்திக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளது.

பல இடங்களில் அதிர வைக்கும் டிக்கெட் விலையால் ரசிகர்கள் கடுப்பாகினர். இப்படத்துக்கு யு சர்ட்டிபிக்கெட் தான் கொடுக்கப்பட்டது. ஆனால் பல வெளிநாடுகளில் இப்படத்துக்கு 15 வயதுக்கு மேற்ப்பட்டவர்களை மட்டும் தான் அனுமதிக்கின்றனர்.

இதுபற்றி டிக்கெட் புக்கிங் செய்யும் போதே சரியான தகவல் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்போது எந்த தகவல்களும் கொடுக்கப்படாததால் பிரித்தானியாவில் பலர் குழந்தைகளோடு குடும்பமாக திரையரங்குக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என்று புலம்பி தவித்துள்ளனர்.

படத்துக்கு வேறு நெகட்டிவ் கமெண்டுகள் வரும் நிலையில் இனியும் இப்படத்தை பார்க்க மாட்டோம் என்று கடுப்புடன்தான் திரும்பி சென்றுள்ளனர்.

மேலதிக விபரங்கள் அறிய

Related Posts:

«