கமல் தவறு செய்கிறார்?

விஸ்வரூபம் திரைக்கு வருவதற்கு முன்னரே விளம்பரங்களில் விஸ்வரூபம் எடுத்துவிட்டது.


 இஸ்லாமிய அமைப்புக்களின் போராட்டம், DTH ஆல், திரையரங்கு உரிமையாளர்கள்களின் அதிருப்தி, ஆங்காங்கு ஆடியோ ரிலீஸ் பிரஸ்மீட் நிகழ்வுகள், விஜய் டிவியில் கமல் கலந்து கொண்டது என அனைத்தும விஸ்வரூபம் பற்றி மிகப்பெரும் எதிர்பார்ப்பு ஒன்றை இயல்பாகவே ரசிகர்களிடையே ஏற்படுத்திவிட்டது. ஆனால் இது ஆரோக்கியமானதா அல்லது கமல் தொடர்ந்து செய்யும் செய்யும் தவறா என ஆராய்கிறது இந்த பேஸ்புக் பதிவு. – 4தமிழ்மீடியா குழுமம்

விஸ்வரூபம் படத்துக்கு கமல் போடும் பப்ளிசிட்டி ஸ்டண்ட்களை பார்க்க கமல் ரசிகன் என்கிற முறையில் பயமாகவும் கவலையாகவும் இருக்கிறது…கமலின் அடுத்த நகர்வை நினைத்து, விஸ்வரூபம் படத்த்தில் போட்ட காசை எடுக்கத்தான் வேண்டும் ஆனால் அதற்காக தவறுகள் விடலாமா?

முதல் தவறு விஜய் டிவியில் T20 singers ல் டிடியின் மொக்கைக்கு பலியானது….கமலுக்கு இது தேவையா?….விஜய் டிவி தங்கள் பப்ளிசிட்டிக்காக அவரை முழுங்குகிறது போல உள்ளது …வெளிநாடுகளில் ஹோலிவுட் படம் ஓன்று திரைக்கு வரும் நாட்களில் அதன் நடிகர்கள் ஓடி ஓடி டிவி ஸ்டேஷன்களில் வந்து தங்கள் படத்துக்கு பப்ளிசிட்டி தேடுவார்கள்….அது அவர்கள் கான்ட்ராக்ட்டில் உள்ளது ….ஆனால் நடிகர்கள் செய்யும் பப்ளிசிட்டிக்கு எதிரமறையான ரிசல்ட்களே பல இடங்களில் கிடைத்து இருக்கிறது…அதே வியாதி இப்பொழுது தமிழ் திரையுலகை பிடித்து விட்டது…..அது விஸ்வரூபத்தில் ஓவரோ ஓவர்.

விஸ்வரூபம் பட பாடல்களை கேட்கும் பொழுது எதோ வடநாட்டு கோவில் பஜனைகள் கேட்பது போல இருக்கிறது…இத்தனைக்கும் மத்தியில் கமலை பார்க்க பாவமாகவும் இருக்கிறது…..புகழ்ச்சிக்கு மயங்கி பல தவறுகளை விடுகிறார்….முதலில் படத்தை டிவியில் ரிலீஸ் செய்தல்….அவர் கனவு காணும் ஹோலிவுட்டே செய்ய துணியாத வேலை….சினிமாவில் புது யுக்திகளை புகுத்திய ஹோலிவுட்டே செய்ய வில்லை என்றால் அதற்க்கு காரணம் இருக்கிறது. அடுத்தது என்ன வாரா வாரம் டிவியில் விஸ்வரூபம் சீரியல் நடத்துவதா?….சினிமாக்காரர்களின் கோபம் நியாயமானது….

அடுத்த தவறு இஸ்லாமியர்களை கோபபடுத்தியது …..அமெரிக்காவே கதி என படங்களை அங்கே எடுப்பது…கமலுக்கு தேவை சென்னை, தமிழ்நாடு கமலின் டீம் கிரேசி மோகன்,ரவிக்குமார், மறைந்த அனந்து ,சுஜாதா etc….

இவர்கள் இல்லையென்றால் கமல் கஷ்டபடுகிறார் அன் ஈசியாக இருக்கிறார்….விஜய் டிவி T20யில் தடுமாறி நெளிந்தது போல வெள்ளைக்காரகளுடன் தடுமாறுகிறார்….வேட்டையாடு விளையாடு படத்தில் அவர் தடுமாற்றம் அப்படியே தெரிந்தது…..இருக்கிறதை விட்டுட்டு பறக்கிறதை பிடிக்க முயற்சி பண்ணுறார்.

ஆனாலும் கமல் கடுமையாக உழைக்கிறார் என்பது மறுக்க முடியவில்லை…ரிசல்ட் வருமா என்பதுதான் கேள்வி.
கமல் இந்த படத்துக்கு பிறகுதானும் தன்னை தானே சுய விமர்சனம் பண்ணனும்…..சில வேளைகளில் மணி ரத்தினம் போல மீடியா பக்கம் தலை காட்டாமல், பேட்டிகள் கொடுக்காமல் கௌரவமாக நடிப்பு தொழிலை தொடருவதே நல்லது…. அப்பதான் சஸ்பென்ஸ் இருக்கும் ….கமலின் பலம் பெரிய திரை அதை விட்டுட்டு இந்த விஜய் டிவி சூப்பர் சிங்கர், ,ஆடியோ வெளியீடு, Dth எல்லாம் தேவை இல்லாதது….அட இவ்வளவுதானா கமல் என்கிற எண்ணத்தை கொண்டு வருகிறது…கொஞ்சம் சஸ்பென்ஸ் தேவை.

பதிவின் மூலம் : Ranjan Kumar (Facebook)

இப்பதிவையும் காண்க :

Related Posts:

«