கமல் விஷயத்தில் விவேக் பல்டி?

ஜுலை இறுதியில் வர வேண்டிய கமல்ஹாசனின் ‘பாபநாசம்’ படத்தை திடீரென ஜுலை 3 ந் தேதியே திரைக்கு கொண்டு வர முடிவெடுத்துவிட்டார்கள்.


அதே நாளில் வெளியாகவிருந்த சிறு படங்களில் பல வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டன. ‘எங்களுக்கு தியேட்டரே கிடைக்காதே? நாங்க என்ன பண்ணுவோம்?’ இதுதான் அவர்களின் கவலை. பதினைந்து கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டு எடுக்கப்படும் படங்களும், பெரிய ஸ்டார் அந்தஸ்துள்ள படங்களும் பண்டிகை தினங்களில் மட்டுமே வர வேண்டும் என்பது தயாரிப்பாளர் சங்கத்தின் கட்டளை. இந்த ராஜகட்டளையை மீறுகிறார் கமல் என்பது ஒருபுறம் இருக்கட்டும்… இதில் பேரதிர்ச்சியான விவேக், மற்றவர்கள் போல அமைதியாக இல்லாமல் தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரே கொடுத்துவிட்டார். இவர் நடித்த ‘பாலக்காட்டு மாதவன்’ என்ற படத்தை ஜூலை 3 ந் தேதி ரிலீஸ் செய்வதாக இருந்தாராம். முன்பு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கமலை புகழ்ந்து வந்த விவேக், தனக்கென வரும்போது ‘சட்டிப்பானையை கவுத்’ ஆகிவிட்டாரே என்று கண் சிமிட்டி கவலை கொள்கிறது கோடம்பாக்கம்.

Related Posts:

«