கருப்பு வெள்ளை காலம் தொட்டு, தமிழ் சினிமாவின் எவர்கிரீன் காதல் மன்னன் கமல் ஹாசன்!

சென்னை: பெரும்பாலான கலைஞர்கள் காதலில் மன்னர்களாகவே இருப்பார்கள். கலா ரசனையுடன் வாழ்க்கையை அணுகுவதால் கிடைக்கும் லாபம் அது. அவர்களுக்கு காதலும் ஒரு உன்னத கலைதான்.

பிறவி கலைஞர் என புகழப்படும் கமல்ஹாசனும் அந்த காதல் கலையில் கை தேர்ந்தவர். பிளாக் அன்டு ஒயிட் திரைப்பட காலத்தில் இருந்தே கமலையும், காதலையும் பிரித்து பார்க்க முடியாது. அவர் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டவர்.

Actor Kamal Hassan have multi full lovers

முதலில் இவருடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை ஸ்ரீ வித்யா. அவர் கமலை விட வயதில் பெரியவர் என்பதால் இவர்களது காதல் கை கூடவில்லை என்ற பேச்சு உண்டு. இருவரும் இணைந்து தமிழ், மலையாள படங்கள் பலவற்றில் நடித்து, அத்தோடு அன்பையும் பரிமாறிக்கொண்டனர்.

இதன்பிறகு, பரத நாட்டிய நடன கலைஞர் வாணி கணபதியுடன் காதல் கொண்டார் கமல். இருவரும் நடனத்தில் கைதேர்ந்தவர்கள் என்பதால் நர்த்தனம் புரிந்தனர். கமலுக்கு திருமண உறவில் நம்பிக்கை இல்லாததால் திருமணம் செய்யாமல் லிவ்விங் டு கெதர் வாழ்க்கை முறையை தமிழகத்தில் அறிமுகம் செய்தார். ஆனால் வாணி கணபதியோ பாரம்பரிய வாழ்க்கைக்கு பழக்கப்பட்டவர். திருமணம் செய்ய வாணி கணபதி நெருக்கடி கொடுத்ததால் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர்.

இந்நிலையில்தான், பாலிவுட் படங்களில் பிசியானார் கமல். அப்போது அறிமுகமானார் குஜராத்தை சேர்ந்த நடிகை சரிகா இருவருக்கும் காதல் மலர்ந்து திருமணம் செய்துக் கொள்ளமல் வாழ்ந்து வந்தனர். இருவரின் காதல் வாழ்க்கைக்கு பரிசாக ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் என இரு பெண் குழந்தைகளை பெற்றெடுத்தப் பின் உறவினர்கள் வலியுறுத்தலால் திருமணம் செய்துக் கொண்டனர்.

கவுதமிக்கு முன்பாக, கமலுடன் கடைசியாக கிசுகிசுக்கப்பட்ட நடிகை சிம்ரன். பஞ்சதந்திரம், பம்மல் கே சம்மந்தம் போன்ற படங்களில் கமலுக்கு ஜோடியாக நடித்தார் சிம்ரன். கமலை விட 22 வயது இளைய சிம்ரன் கமலுடன் நெருக்கமான உறவில் இருந்ததாக வெளியான தகவலால், 14 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த கமல்-சரிகா ஜோடி பிரிந்தது. கடந்த 2004ம் ஆண்டு இருவரும் விவாகரத்துப் பெற்றனர். இதனிடையே சிம்ரன் வேறு ஒருவரை மணந்தார்.

அதன் பின்னர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த கௌதமிக்கு ஆதரவாக இருந்து அவரை தாலிகட்டாத வாழ்க்கை துணையாக ஆக்கிக் கொண்டார். தேவர்மகன், குருதி புனல் போன்ற படங்களில் நடித்த போதே இருவருக்கும் இடையே இனம் புரியாத ஒரு ஈர்ப்பு ஏற்பட்டதாகவும், அதுவே தாமதமாக காதலாக மாறியதாகவும் கூறிக்கொண்டனர் இருவரும். இந்நிலையில்தான், 13 வருடங்களுக்கு பிறகு இவ்விரு ஜோடியும் பிரிந்துள்ளது.

வாணி கணபதி, சரிகா ஆகியோரை நான் திருமணம் செய்து கொண்டேன். எனக்கு பிடித்தவர்களின் ஆசையை நிறைவேற்ற நான் செய்த முட்டாள்தனமான செயல்தான் திருமணம். நான் செய்து கொண்ட ஒரு சமரசம் அது. நான் விரும்பிய பெண்ணுடன் இருக்க நான் கொடுத்த விலைதான் திருமணம், என்று முன்பு ஒருமுறை கமல் கூறியிருந்தார். இந்த வெளிப்படைத்தன்மைதான் கமல்.

Source http://feedproxy.google.com/~r/oneindia-thatstamil-all/~3/t3Pcl5xpto4/actor-kamal-hassan-have-multi-full-lovers-266126.html

Related Posts:

  • No Related Posts

«