கறிக்குழம்பு வைக்க மறுத்த மனைவியின் கழுத்தை அறுத்த கணவன் கைது

திருச்சி: மணப்பாறை அருகே கறிக்குழம்பு வைக்க மறுத்த மனைவியின் கழுத்தை அறுத்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

மணப்பாறை அடுத்த வாகைக்குளம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். வீட்டில் பலகாரங்கள் செய்து கடைகளுக்கு வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தி(44). இந்நிலையில் சாந்தி விரதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்று முன்தினம் குடிபோதையில் வந்த சண்முகம் மனைவியிடம் கறிக்குழம்பு வைத்து தரும்படி கூறியுள்ளார்.

Husband arrested with attempted murder of his wife

ஆனால் அவர் விரதம் இருப்பதால் கறிக்குழம்பு வைக்கக்கூடாது என கூறிவிட்டு பக்கத்து வீட்டு பெண்ணுடன் சேர்ந்து பெருமாள் கோயிலுக்கு சென்றுவிட்டார். அவர்கள் பின்தொடர்ந்து வந்த சண்முகம் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்தார்.

இதைப்பார்த்த அப்பகுதியினர் சத்தம் மிட்டனர். அங்கிருந்தவர்கள் ஓடி வந்து சண்முகத்திடம் இருந்து சாந்தியை மீட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சண்முகம் மணப்பாறை போலீசில் சரணடைந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையிலடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source http://feedproxy.google.com/~r/oneindia-thatstamil-all/~3/joBOw2WUKOo/husband-arrested-with-attempted-murder-his-wife-266168.html

Related Posts:

«