களுவாஞ்சிக்குடியில் விசேட சோதனை: 4 பேருக்கு எதிராக வழக்கு! 10 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை

டெங்கொழிப்பு வாரத்தினை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது நான்கு பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், 10 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொதுச் சுகாதார மேற்பார்வை பரிசோதகர் எஸ்.திருச்செல்வம் தெரிவித்தார்.

இதற்கான உத்தியோக பூர்வ ஆரம்ப நிகழ்வு களுவாஞ்சிகுடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.கிருஸ்ணகுமார் தலைமையில் களுவாஞ்சிக்குடி பஸ்தரிப்பு நிலையத்தில் வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சோதனை நடவடிக்கையை பொதுச் சுகாதார பரிசோதகர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள், பொலிசார், இராணுவத்தினர் என பலரும் கலந்து கொண்டு முன்னெடுத்தனர்.

வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளை அண்டிய ஐம்பது வீடுகள் என்ற அடிப்படையில் மொத்தமாக 750 வீடுகள் சோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.

Related Posts:

«