கவியரசு வரிகளை காப்பியடித்த பவர்

Monday, 12 November 2012 06:24

இந்த விஷயத்தை கேட்டால் கண்ணதாசன் ஆவியே கூட கவலையை மறக்க ‘கிளாஸ்’ தேடும்.


அதென்ன என்கிறீர்களா? அது கடைசி பாராவில்.

சென்னையிலிருக்கும் ஆபிசை பூட்டிவிட்டார். ஆளே தலைமறைவு என்றெல்லாம் அவர் ஜெயிலுக்கு போய் திரும்பி வந்த நாளில் பேச ஆரம்பித்தவர்கள் சர்வ நாடியும் ஒடுங்கிப் போய் நிற்கிறார்கள். பெரிய மனுஷன் வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா என்று திமிறிக் கொண்டு நிற்கிறார் பவர்ஸ்டார் சீனிவாசன். இவரது பேக்ரவுண்ட் தெம்பில் புதிய பட தயாரிப்பில் இறங்கியிருக்கும் சந்தானம், ‘சார் எங்கிட்ட முன்னாடியே சொல்லியிருந்தா உங்க பிராப்ளத்தை முளையிலேயே கிள்ளி எரிஞ்சுருக்கலாம். பட் எனிவே எதுவா இருந்தாலும் எத்தனை மணி இரவா இருந்தாலும் என்னை கூப்பிடலாம்’ என்று கூறியிருக்கிறாராம்.

Brew சஞ்சிகை வெளியீடு படங்கள்

நடிகை Khushi படங்கள்

போரிட பழகு திரைப்பட படங்கள்

Monica படங்கள்

தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் திரைப்பட படப்பிடிப்புத்தளம் படங்கள்

நடிகர் ஆனந்தராஜ் பிறந்தநாள் கொண்டாட்ட படங்கள்

மேதை திரைப்பட படங்கள்

மாமன் மச்சான் திரைப்பட படங்கள்

தனது பணத்தை கோடம்பாக்கத்தில் வட்டிக்கு கொடுத்து அப்படங்களில் தானும் நடிப்பதை வழக்கமாக வைத்திருந்த சீனிவாசன், இப்போது முழு தெம்போடு ஒரு படத்திற்கு பிளான் போட்டு வருகிறார். இந்த படத்திற்கு ‘நிரந்தரமானவன்’ என்று பெயர் வைத்திருக்கிறாராம். கதை திரைக்கதை வசனம் பாடல்கள் மற்றும் தயாரிப்பு என்று ஒரு டஜன் வேலைகளை இப்படத்தில் கவனிக்க இருக்கிறார் பவர்.

இவர் நடித்து சுமார் அரை டஜன் படங்கள் பெட்டிக்குள் முடங்கி கிடக்க இந்த புதுப்படத்திற்கு அவர் பிளான் போடுவது சில முன்னணி இயக்குனர்களை நம்பிதானாம். ஷங்கரின் ஐ யில் நடிக்கிறார். சந்தானத்துடன் கண்ணா லட்டு திங்க ஆசையாவில் இருக்கிறார். சிம்புவுடன் வாலுவில் வம்பு பண்ணுகிறார். இந்த படங்கள் வந்து அதில் ஒன்று ஹிட்டானாலும் தனது சொந்தப்படத்திற்கு கூட்டம் கட்டி ஏறும் என்று நம்புகிறாராம் பவர்.

‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை’ என்றார் கவியரசு கண்ணதாசன். அவரது மெர்க்குரி வார்த்தைகளை  தயக்கமின்றி பயன்படுத்தும் பவர் ஸ்டாரை என்ன சொல்லி அழைப்பது?

Related Posts:

«

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *