காங்கிரசுக்கு எதிராக அன்னா ஹசாரே பாதயாத்திரை : அமிர்தசரஸில் தொடங்கினார்!

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிராக காந்தியவாதியான அன்னா ஹசாரே, பாதயாத்திரையை அமிர்தசரஸ் நகரில் இருந்து நேற்று தொடங்கினார்.


இந்த பாத யாத்திரையை அவர் 5 மாதங்கள் நடத்த திட்டமிட்டுள்ளார்.

ஊழலுக்கு எதிரான அமைப்பை சேர்ந்த 75 வயதான காந்தியவாதி அன்னா ஹசாரே, மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கோட்டணி அரசுக்கு எதிராக ஜனநாயகத்துக்கான யாத்திரையை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் இருந்து நேற்று தொடங்கினார். அவர் இந்த பாதயாத்திரையின் போது, நாடு முழுவதும் முக்கிய பகுதிகளுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளார் என்றும் தெரிய வருகிறது.

அவர் இந்த யாத்திரையை 5 மாத காலம் நடத்தி, டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் முடிக்க உள்ளார். ஜனநாயக யாத்திரையை தொடங்குவதற்கு முன், அவர் பொற்கோவில் சென்று வழிபட்டார் என்பது குறிப்பிடத் தக்கது. ஹசாரே தனது யாத்திரை குறித்து கூறுகையில்,

“இந்த யாத்திரையின் போது, பொதுமக்கள் முன்  25 முக்கிய பிரச்சனைகளை முன்வைக்க உள்ளோம். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மக்களைத் திரட்டுவது மட்டுமே, இந்த ஜனநாயக யாத்திரையின் முக்கிய நோக்கமாக இருக்கும். அடுத்த ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலில் இப்போதைய ஊழல் மலிந்த அரசு, மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதே யாத்திரையின் முக்கிய நோக்கம்.” என்று கூறியுள்ளார் ஹசாரே.

Related Posts:

«