கிரிக்கெட் என்னை சிறந்த மனிதராக்கியது;ராகுல் டிராவிட்

இந்திய அணியின் முன்னாள்  கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்,


கிரிக்கெட் விளையாட்டுத்தான் என்னை மிகவும் சிறந்த மனிதராக மாற்றியது என்று கூறியுள்ளார்.

கோவா பல்கலையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ராகுல் டிராவிட் கலந்து கொண்டார். அப்போது, ”ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின்னர், இளம் தலைமுறையினருக்கு வழிவிட்டு ஓய்வு பெற இதுவே சரியான நேரம் என்று நினைத்தேன். ஓய்வு பெற்ற 15 ஆண்டுகளுக்குப்  பிறகுதான்,என்னை கிரிக்கெட் சிறந்த மனிதராக உருவாக்கியது என்பதை உணர்ந்தேன்.

வெற்றி, தோல்விகளில் இருந்து படம் கற்றுக் கொண்டேன். வெற்றி  பெற லட்சக் கணக்கான வழிமுறைகள் இருக்கின்றன. நீங்கள் உலகின் முதல் நிலை வீரராக இல்லாவிட்டாலும் உங்கள லட்சியங்கள் வெற்றி பெற்றாலே, நீங்கள் முதன்மையானவர்கள்.” என்று கூறிய டிராவிட் தனது பள்ளி வாழ்க்கையில் தொடங்கி கிரிக்கெட் வாழக்கை வரையிலான பல்வேறு விஷயங்கள் குறித்து டிராவிட் பேசினார்.

தனது பள்ளி முதல்வரையும் நினைவு கூர்ந்தார். சிறு வயதில்  தனது தந்தையின், ஸ்டூடியோவில் கிரிக்கெட் வர்ணனை கேட்டுக் கொண்டிருந்த மகிழ்ச்சியான் தருணத்துக்கு மீண்டும் திரும்பி இருப்பதாக தெரிவித்தார்.

Related Posts:

«