கூட்டு எதிரணியின் அரசியல் நடவடிக்கைகளுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எனும் பெயரில் புதிய கட்சி!

குறித்த புதிய கட்சியை தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அத்தோடு, கூட்டு எதிரணி தனது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இந்த புதிய அரசியல் கட்சியை பயன்படுத்திக் கொள்ளப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அரசியல் கட்சியின் தவிசாளராக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் செயற்படவுள்ளார். இந்த கட்சியினை முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ வழி நடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.

 

Related Posts:

  • No Related Posts

«