கொழுந்து பறித்தல் போட்டி! 160 தொழிலாளிகள் கௌரவிப்பு (மலையக செய்திகள்)

வட்டவளை பெருந்தோட்ட நிர்வாகத்திற்கு சேர்ந்த அட்டன் வட்டளை தோட்ட நிர்வாகத்திற்கும், லிந்துலை தோட்ட நிர்வாகத்திற்கும் உட்பட்ட 10 தோட்டங்களில் 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் இந்தப் போட்டிகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்ச்சிக்கு தோட்ட பிரதான நிறைவேற்று அதிகாரி கலாநிதி டேன் சீவரட்ணம் உட்பட தோட்ட நிர்வாகத்தின் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

மலையக தோட்ட தொழிலாளிகளை உற்சாகப்படுத்துவதற்காகவே இவ்வாறு கௌரவிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக தோட்ட நிர்வாகம் தெரிவிக்கின்றது.

பாரிய மண்சரிவினால் வீதி மூடப்பட்டு​ள்ளது

பெய்த கடும் மழை காரணமாக ஹற்றன்- நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா பங்களாஅத்த பகுதியில் இன்று மாலை 4 மணியளவில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ குமாரசிரி தெரிவித்தார்.

இதனால் அவ்வீதியினூடாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் குறித்த இடத்தில் பல தடவைகள் மண்சரிவு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

மலையகத்தில் கடும் மழையுடன் பனி மூட்டம்: பொலிஸார் எச்சரிக்கை

மலையகத்தில் இன்று பிற்பகல் முதல் கடும் மழையுடன், பனிமூட்டமும் கூடிய சீரற்ற காலநிலையே நிலவுகின்றது.அத்தோடு பனிமூட்டம் அதிகரித்து காணப்படுவதன் காரணமாக வாகன சாரதிகள் பல சிரமங்களை எதிர்நோக்கின்றனர்.

குறிப்பாக ஹற்றன் – கொழும்பு பிரதான வீதி மற்றும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் பனிமூட்டம் காணப்படுவதன் காரணமாக இவ்வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகளை வாகனத்தை அவதானமாக செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.

இதனால் மலையகத்தில் உள்ள நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts:

«