கொழும்பு தேசிய புத்தகக் கண்காட்சியில் நந்திக்கடலுக்கான பாதை புத்தகத்திற்கு அதிக கேள்வி


மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன எழுதி வெளியிட்டுள்ள நந்திக்கடலுக்கான பாதை புத்தகத்திற்கு தற்போது இடம்பெற்று வரும் தேசிய புத்தகக் கண்காட்சியில் அதிக கேள்வி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த புத்தக கண்காட்சிக்கு வந்த பலரும் இந்த புத்தகத்தை பெறுவதற்கு வரிசையில் காத்துக்கொண்டிருந்ததாகவும், இதனைப் பெறுவதில் பலரும் ஆர்வம் காட்டி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மேஜர் கமால் குணரத்ன புத்தகக் கண்காட்சி இடம்பெறும் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்துக்கு வருகைத் தந்தாகவும், இவரிடமே நேரிடையாக இவர் எழுதிய புத்தகத்தை மக்கள் பெற்றுக்கொள்வதில் தீவிரம் காட்டியதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, இலங்கையில் மிகவும் குறைந்த நாட்களுக்குள் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஒரே ஒரு புத்தகம் “நந்திக்கடலுக்கான பாதை” என விஜித யாப்பா நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Related Posts:

«