கோத்தபாயவை பாதுகாக்கும் பிரபல அமைச்சர் யார்? கைது செய்யாததற்கு காரணம் என்ன?

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஒருவரை ஆபத்திலிருந்து முக்கிய அமைச்சர் ஒருவர் பாதுகாத்து வருதாக புலனாய்வு பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராகவுள்ள விசாரணை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரபல அமைச்சருடன் தொலைபேசி உரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய அவர் ஐக்கிய தேசிய கட்சியுடன் சில புரிந்துணர்வுடன் செயற்படுவதாக சந்தேகம் உள்ளதென புலனாய்வு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை கோத்தபாய தொடர்பில் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள போதிலும் அவருக்கு எதிராக எவன்கார்ட் சம்பவம் தொடர்பில் மாத்திரமே வழக்கு தொடரப்பட்டுள்ளது.

எவன்கார்ட் தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியமை தொடர்பில் அரசாங்கத்திற்கு 1140 கோடி ரூபா நட்டம் ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு உட்பட பலவீனமான குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் பார்க்கும் போது அடிப்படையற்றதாக காணப்படுவதாக கடந்த காலங்களில் சட்டத்துறையில் விவாதிக்கப்பட்டது.

கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை மற்றும் அந்த குற்றச்சாட்டுக்களில் உறுதி செய்யக்கூடிய வகையிலான சாட்சிகள் கிடைத்துள்ளன.

அரசாங்க பணத்தை பயன்படுத்தி மெதமுல்லையில் டீ.ஏ.ராஜபக்ச அறக்கட்டளையில் நினைவுச்சின்னம் நிர்மாணித்தமை மற்றும் மிக் விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யாமல் எவன்கார்ட் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு பலவீனமான வழக்கு ஒன்றை நீதிமன்றத்திற்கு கொண்டுவந்தமை சிக்கலுக்குரிய ஒரு விடயமாகியுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் போது இடம்பெற்ற பாரிய குற்றங்கள் தொடர்பில் சட்டம் செயற்படுத்துவதற்கு அவசியமற்ற வகையில் தாமதமாகின்றமை தொடர்பில் தற்போது வரையில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வரையில் விசாரணை நடவடிக்கை நிறைவு செய்யப்பட்டுள்ள ஐந்திற்கும் அதிகமான சம்பவங்கள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் வழக்கு தாக்கல் செய்வதனை தாமதப்படுத்தியுள்ளமை குறித்து கடந்த காலங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டது.

அத்துடன் குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் நிதி மோசடி பிரிவு சில சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ள முறை குறித்து தற்போது வரையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன் நல்லாட்சி அரசாங்கத்துடன் கோத்தபாய இணைந்து செயற்படவுள்ளதுடன், தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் பெற்றுக்கொள்ள இணக்கம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts:

«