சட்டத்தரணி வர்ணகுலசூரியவை கடுமையாக திட்டிய மஹிந்த!

சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரியவை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடுமையாக திட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதி ஷிரான் குணரத்னவின் தொலைப்பேசி அழைப்புகள் ஒட்டு கேட்கப்பட்டதாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் மஹிந்த, சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரியவை கடுமையாக திட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, நீதிமன்ற நீதிபதி ஷிரான் குணரத்னவின் தொலைப்பேசி ஒட்டுக் கேட்கப்பட்டதாக சந்தேகம் உள்ளதென்றால் அது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் உட்பட பொறுப்பு கூற வேண்டிய அதிகாரிகளிடம் முறைபாடு செய்ய வேண்டும் என இலங்கை சட்டதரணிகள் சங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரியவிடம் அறிவித்துள்ளனர்.

அப்படியிவ்லை இல்லை என்றால் இது தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்திடம் முறைப்பாடு செய்வதில் பலன் இல்லை. இது சம்பந்தமான பல்வேறு விசாரணை அவசியம் என்றால் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யுமாறு குறிப்பிட்டுள்ளனர்.

அவ்வாறு பொலிஸ்மா அதிபர் உட்பட பொறுப்பு கூற வேண்டி அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்தால் நீதிபதி ஷிரான் குணரத்வின் தொலைப்பேசி அழைப்புகளின் தரவுகள் ஆய்வு செய்யப்படும் சந்தர்ப்பம் ஏற்படும். அதன் ஊடாக பல தகவல்கள் வெளியாகும் என்பது அந்த சட்டத்தரணிகளின் கருத்தாகும்.

நீதிபதி ஷிரான் குணரத்ன மற்றும் மரண தண்டனை கைதி துமிந்த சில்வாவுக்கு இடையில் கடந்த காலங்களில் நெருக்கமான உறவு ஒன்று காணப்பட்டதாக கூறப்படுகின்றது.

Related Posts:

«