சத்துணவுப் பணியாளர்கள் விஷயத்தில் தமிழக அரசு சர்வாதிகாரப் போக்கைக் கைவிட வேண்டும்:வைகோ

சத்துணவுப் பணியாளர்கள் விஷயத்தில் தமிழக அரசு சர்வாதிகாரப் போக்கைக் கைவிட வேண்டும் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ அறிக்கை விடுத்துள்ளார்.


 

புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தின் படி ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று பல கோரிக்கைகளை முன்வைத்து சத்துணவுப் பணியாளர்கள் கடந்த மூன்று நாட்களாக காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டு உள்ளனர். ஆனால், தமிழக அரசு மாவட்ட ஆட்சியர் மூலமாக பணிக்கு வராத சத்துணவுப் பணியாளர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், சத்துணவு வழங்கும் பணி பாதிப்படையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.

இதுக்குறித்து அறிக்கை விடுத்துள்ள வைகோ, தமிழக அரசு சத்துணவுப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும். இதை விடுத்து அவர்களை விரட்டியடிக்கும் சர்வாதிகாரப் போக்கை உடனடியாக அரசு கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். சுமார் ஒரு லட்சம் சத்துணவுப் பணியாளர்களின் கோரிக்கை நியாயமானதுதான் என்பதை அரசு உணர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Related Posts:

«