சர்வதேச அஹிம்சை தினம் – யாழ்ப்பாணத்தில் நிகழ்வு


சர்வதேச அஹிம்சை தினத்தை, யாழ்ப்பாணத்தின் இந்திய உதவி உயர்ஸ்தானிகரகம் கொண்டாடுகிறது.

மஹாத்மா காந்தி ஜனன தினமான 1869ஆம் ஆண்டு ஒக்டோபர் 2ஆம் திகதியை குறிக்கும் வகையிலேயே இந்த தினம் வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதியன்று இந்த நிகழ்வு, யாழ்ப்பாணம் நல்லூர் துர்கா மணிமண்டபத்தில் இலங்கை காந்தி சேவை சங்கத்தின் ஆதரவுடன், இடம்பெறவுள்ளதாக யாழ்ப்பாணத்தின் இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ஏ.நடராஜன் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் சர்வதேசத்துக்கு நன்கு அறிமுகமான தமிழகத்தின் அறிஞர் பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஸ்ணன், முக்கிய உரையை நிகழ்த்தவுள்ளார்.

Related Posts:

«