சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து அடுத்த ஆண்டு டோணி ஓய்வு?

டெல்லி: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணி கேப்டன் டோணி அடுத்த ஆண்டு ஓய்வு பெறக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி வரை டோணியே கேப்டனாக நீடிக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து 2014-ம் ஆண்டு டோணி ஓய்வு பெற்றார். அப்போது ஒருநாள் போட்டிகளில் தாம் அதிக கவனம் செலுத்துவேன் எனக் கூறியிருந்தார் டோணி.

அண்மையில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை 3-2 என்ற கணக்கில் டோணி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் மினி உலகக் கோப்பையாக கருதப்படும் சாம்பியன்ஸ் டிராபி போட்டி தொடர் நடைபெற உள்ளது.

<!–

–>

டோணி ஓய்வு?

இந்த தொடருக்குப் பின்னர் டோணி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறக் கூடும் என ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. ஆனால் முன்னாள் கிரிக்கெட் வீரர்களோ, 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகள் வரை டோணி தொடர்ந்து விளையாட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.

<!–

–>

வயதாகிவிட்டதா?

இது தொடர்பாக முன்னாள் வீரர் ஆஷிஸ் நெஹ்ரா கூறுகையில், 2019 உலகக் கோப்பை போட்டியின் போது டோணிக்கு 38 வயதாகும். பாகிஸ்தானைச் சேர்ந்த யூனுஸ் கான், மிஸ்பாஉல் ஹக் ஆகியோர் 40 வயதை கடந்த பின்னரும் சர்வதேச போட்டிகளில் விளளயாடி வருகின்றனர். டோணியும் 2019 வரை விளையாடுவதற்கான உடற்தகுதி கொண்டவர்தான் எனக் கூறியுள்ளார்.

<!–

–>

உலகக் கோப்பையிலும்...

மேலும் டோணி ஓய்வு பெறுவதற்கான எந்த காரணமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை; நியூசிலாந்து தொடருக்குப் பின்னர் 2 மாதங்கள் ஓய்வு இருக்கிறது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன. அந்தத் தொடரிலும் டோணி தம்முடைய கேப்டன்ஷிப்பை நிரூபிப்பார் என்றார் நெஹ்ரா.

<!–

–>

ரவிசாஸ்திரி

முன்னாள் வீரர் ரவிசாஸ்திரி கூறுகையில், கபில்தேவ், கவாஸ்கர், டெண்டுல்கர் போன்றவர் டோணி. அவரால் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரை நிச்சயம் விளையாட முடியும் என்றார்.

<!–

–>

டோணி தேவை

முன்னாள் விக்கெட் கீப்பர் கிரன் மோரே கூறுகையில், சர்வதேச போட்டிகளில் உடற்தகுதி என்பது மிகவும் முக்கியமானதுதான். இதற்காக டோணி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவர் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்புகளே அதிகம். இந்தியாவுக்கு டோணி தேவை என்றார்.

Source http://feedproxy.google.com/~r/oneindia-thatstamil-all/~3/w4a3_X_Njx4/dhoni-consider-retirement-after-champions-trophy-266097.html

Related Posts:

«