சவரக்கத்தி படத்தின் சுவாரஸ்யங்களை சொல்லும் இசையமைப்பாளர் அரோல் கரோலி..!


பிசாசு படத்தில் மிஷ்கின் அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர் அரோல் கரோலி தான் சவரக்கத்தி படத்துக்கும் இசையமைப்பாளர். பிசாசு படத்தில் ஒரு பாடலை மட்டும் வைத்த மிஷ்கின், இந்த படத்தில் இரண்டு பாடல்களை வைத்துள்ளார். இயக்குநர் ராம் மற்றும் இயக்குநர் மிஷ்கின் இணைந்து நடித்திருக்கும் சவரக்கத்தி படத்திலுள்ள இரு பாடல்களைப் பற்றியும் இசையமைப்பாளர் அரோல் கரோலி கூறுகிறார். 


“பிசாசு படத்தில் மிஷ்கின் சாரோடு சேர்ந்து ஒர்க் பண்ணியதால், இசையில் அவரது எதிர்பார்ப்பு என்ன என்பது எனக்கு தெரியும். அது தான் சவரக்கத்தி படத்தில் நான் வேலை பார்க்க ஈசியா இருந்தது. இந்தப் படத்தில், ‘தங்கக்கத்தி, இரும்புக்கத்தி’,‘அன்னாந்து பார்’ என இரண்டு பாடல்கள் இருக்கின்றன. ‘தங்கக்கத்தி, இரும்புக்கத்தி’ பாடலை எழுதி பாடியுள்ளார், மிஷ்கின். ஏற்கெனவே இந்த பாடலின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வைரலானது. ‘அன்னாந்து பார்’ பாடலை தமிழச்சி தங்கப்பாண்டியன் எழுதியிருக்கிறார். ‘அன்னாந்து பார்’ பாடல் முழுவதும் யதார்த்தமான காட்சிகளால் எடுக்கப்பட்டிருக்கும். இந்த பாடலைப் à®ªà®¾à®°à¯à®•à¯à®•à¯à®®à¯à®ªà¯‹à®¤à¯ ரசிகர்களுக்கு புதுவித à®…னுபவத்தை கொடுக்கும்” என்று நம்பிக்கையோடு சொன்னார் இசையமைப்பாளர் அரோல் கரோலி.

Source http://feedproxy.google.com/~r/Vikatan_Entertainment_News/~3/v71AT3g46QI/article.php

Related Posts:

«