சாதனை… வேகநடைப் போட்டியில் 92 வயதில் தங்கம் வென்று அசத்திய இந்திய வீரர்

பெர்த்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற வேகநடைப் போட்டியில் முதல் முறையாக 92 வயதான இந்திய கடற்படை முன்னாள் வீரர் ஒருவர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 90 முதல் 95 வயதுக்குட்பட்டோருக்கான 5000 மீட்டர் வேகநடைப் போட்டி நடைபெற்றது. இதில் விசாகபட்டினத்தை சேர்ந்த இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான ஸ்ரீராமுலு கலந்துகொண்டு தங்கம் வென்றார்.

 92-yr-old Indian Navy veteran wins gold in Aus race walk

மேலும், இந்த வாரம் நடைபெற உள்ள 10 கி.மீ. மற்றும் 20 கி.மீ. வேகநடைப் பந்தயங்களிலும் ஸ்ரீராமுலு கலந்துகொள்கிறார். இவர் இதற்கு முன்பு நடைபெற்ற பல்வேறு மாஸ்டர்ஸ் தடகளப் போட்டிகளிலும் பங்கேற்று தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source http://feedproxy.google.com/~r/oneindia-thatstamil-all/~3/iJ41miqDjGs/92-yr-old-indian-navy-veteran-wins-gold-aus-race-walk-266087.html

Related Posts:

  • No Related Posts

«