சிம்புவுடன் நெருக்கமான படங்கள் வெளியீடு:போலீசில் புகார் செய்வேன்:நடிகை ஹன்சிகா

12-1376292706-hansika-parties-simbu-02 14-hanssimbu

சிலம்பரசனுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படகள் வெளிவந்து கொண்டு இருப்பது குறித்து, போலீசில் புகார் செய்வேன் என்று, நடிகை ஹன்சிகா கூறியுள்ளார்.

சிம்புவும், நடிகை ஹன்சிகாவும் வாலு, வேட்டை மன்னன் ஆகிய படங்களில் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த வேளையில் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. உடனடியாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சிம்பு தரப்பு கூற, 5 வருடங்களுக்குப் பிறகுதன் திருமணம் என்று பிடிவாதமாக மறுத்து வருகிறார் ஹன்சிகா.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிறந்தநாள் கொண்டாடினார் ஹன்சிகா. இந்த பிறந்தநாள் பார்ட்டியில் சிம்புவும் கலந்து கொண்டார். அப்போதும், அதற்கு முன்பும் சிம்புவுடன், ஹன்சிகா எடுத்துக் கொண்ட நெருக்கமான புகைப்படங்கள் இன்டெர் நெட்டிலும், பல பத்திரிகைகளிலும் வெளியாகிய வண்ணம் உள்ளன. நடிகை ஹன்சிகா இது குறித்து பேசுகையில், ”நாங்கள் இருவரும் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொண்ட படங்கள், எப்படி இது வெளியாகியது என்று தெரியவில்லை. இது பற்றி நான் போலீசில் புகார் செய உள்ளேன்.” என்று கூறியுள்ளார்.

Related Posts:

«