சிறுவாணி குறுக்கே அணை: மத்திய அரசு தடையை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர கேரளா முடிவு!

சென்னை: சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட மத்திய அரசு தடை விதித்துள்ளதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர கேரளா முடிவு செய்துள்ளது.

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடியில் கேரளா அரசு அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

Kerala to approach SC against Centre's notification on Siruvani Dam

தமிழகத்தின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் கேரளா அணை கட்டும் பணிகளை தொடங்கியது. இந்த நிலையில் தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுப்பிய கடிதத்தில், காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு முடியும் வரை சிறுவாணியின் குறுக்கே கேரளா அணை கட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து கேரளா அரசு, மாநில தலைமை வழக்கறிஞருடன் இன்று ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையில் மத்திய அரசின் தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Source http://feedproxy.google.com/~r/oneindia-thatstamil-all/~3/DRj8l1u806Q/kerala-approach-sc-against-centre-s-notification-on-siruvani0-dam-266192.html

Related Posts:

«