சிவகாசி பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 3 லட்சம்!

கடந்த வாரம் சிவகாசியில் பட்டாசுக்கடையில் தீ விபத்து நேரிட்டது. இந்த கடை, மருத்துவ சோதனைகள் செய்யும் ஒரு சோதனை கூடத்துக்கு அருகில் செயல்பட்டு வந்ததால், சோதனைக் கூடத்தில் பணியாற்றியவர்களும் என்று மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.  

இதை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செயுது விசாரித்து வருகிறது. இதற்கிடையில் இன்றைய விசாரணையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தற்காலிக நிவாரண நிதியாக தலா 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

Related Posts:

«