சென்னையில் உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை மெட்ரோ தண்ணீரே தீர்மானிக்கும்; மக்கள் கருத்து!

வரும் உள்ளாட்சி தேர்தலில் யாருக்கு வெற்றி என்பதை உறுதி செய்வது கிட்டத்தட்ட ‘மெட்ரோ வாட்டர்’ துறையாகத்தான் இருக்கும் என்று மக்களின் பொதுவான பரவலான கருத்தாக அண்மையில் இருக்கிறது.காரணம் சென்னையில், அதிலும் வட சென்னையில் குறிப்பாக அம்மா’ தொகுதி என சொன்னாலே தெரிந்துவிடும் அது ஆர்.கே.நகர் தொகுதிதான் என்று.தமிழக முதல்வரின் ஆர்.கே.நகர் தொகுதியில் பொது மக்களை காயவிடுகிறது ‘மெட்ரோ வாட்டர்’.  

கொஞ்சம் நாட்களுக்கு முன் வரை சில நாட்களில் கொஞ்சம் கலங்கலான நீரும்,கொஞ்ச நேரம் நல்ல நீரும் என விட்டு கொண்டிருந்தனர். இப்போது அதற்க்கும் ஆப்பு வைத்து, வீட்டு மெட்ரோ கை பம்ப்களில் தண்ணீர் இல்லாமல்செய்துள்ளனர். இதனை பற்றி ஒருவர் சொல்லும் போது தெரு டேங்குகளில் ஒப்பந்த லாரிகளில்  தண்ணீர் கொண்டு வந்து நிரப்புகின்றனர். வீட்டு பம்ப்க்ளில் தண்ணீர் சரியாக வந்தால் யாரும் டேங்க்  பக்கம் வரமாட்டார்கள்,  

ஒப்பந்த லாரிக்கு  வேலை இல்லாமல் போய்விடும் என்பதால் வீட்டு மெட்ரோ கை பம்ப்களில் தண்ணீர் வராமல் தடுக்க தண்ணீர் வினியோக குழாய்களில் உள்ள வால்வுகளின் அழுத்தத்தை  குறைத்து உள்ளனர். தண்ணீர் வராமல் கஷ்டபடுபவர்களிடம் ‘தெரு டேங்கில் போய் பிடித்து கொள்ளுங்கள்’ என ரெடிமெட் பதில் மெட்ரோ குடிநீர் அலுவலக அதிகாரிகளிடமிருந்து வருகின்றது.  

பொது மக்கள் காலையில் எழுந்து கண்விழிக்கும் போது பார்க்கும் முக்கியமான இரண்டு விஷயம். ஒன்று பால். இன்னொன்று மெட்ரோ வாட்டர். அதில் சங்கடம் என்றால், அதிலும் அம்மா தொகுதியிலேயே சங்கடம் என்றால் சென்னையில் உள்ளாட்சி தேர்தலே ஆளும் கட்சிக்கு சங்கடம் ஆகிவிடும்.ஏனென்றால் சென்னை முழுதும் இதே நிலைதான் என்பதால்,மெட்ரோ வாட்டரே உள்ளாட்சித் தேர்தலின் வெற்றியைத் தீர்மானிக்கும் என்பது சென்னை மக்களின் ஏகோபித்த கருத்து.

 

Related Posts:

«