சென்னையில் மட்டும் ஒரு லட்சம் முதியோர் தனியாக வசிக்கின்றனர்

சென்னையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தியாகராய நகரில் தனியாக வசித்து வந்த மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்த 60 சவரன் நகைகளும் கொள்ளை போயுள்ளன.இதற்கிடையில் தனியாக வசிக்கும் முதியோர்கள் அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று நடைமுறை அமலில் உள்ளது.  என்றாலும்,சென்னை முழுக்க வெறும் 4 ஆயிரத்து 500 முதியோர்கள் மட்டுமே காவல் நிலையத்தில் தாங்கள் தனியாக வசிப்பதாக பதிவு செய்துள்ளனர்.

இவர்களை தினமும் இவர்களது இல்லத்தில் சென்று கண்காணித்து, அவர்களுக்கான பெயர் பட்டாவில் கை எழுத்து வாங்க வேண்டும் என்பது காவல்துறை கடைப்பிடித்து வரும் நடவடிக்கை.இனி தினமும் இப்படி கண்காணித்து, தலைமை ஆய்வாளரிடம் அறிக்கை வழங்க வேண்டும் என்று, துணை ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. 

முதியோர்கள் தங்களது உதவிக்கு அழைக்க அவசர தொலைப்பேசி எண்ணாக 1253 என்கிற எண்கள் வழங்கப்பட்டு உள்ளன. பெரும்பாலும் மருத்துவ உதவிக்காகவே இந்த எண்கள் அழைக்கப்படுகின்றன என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Related Posts:

«