சென்னை மவுலிவாக்கம் அடுக்குமாடிக் கட்டிட்ட விபத்துக் குறித்த விசாரணை அறிக்கைத் தாக்கல்!

சென்னை போரூர் அருகே மவுலிவக்கத்தில் நடந்த அடுக்குமாடிக் கட்டிட விபத்துக் குறித்த விசாரணை அறிக்கையை, நீதிபதி ரகுபதி தாக்கல் செய்தார்.


கடந்த ஜூன் மாதம் மவுலிவாக்கத்தில் முழுவதுமாக கட்டி முடிக்கப்படாத நிலையில் 11 அடுக்கு மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து தரை மட்டமானது. இந்த விபத்தில் 61 பெற்ற பரிதாபமாக உயிரிழந்தனர். இதுக் குறித்து விசாரித்து அறிக்கைத் தாக்கல் செய்ய தமிழக அரசு நீதிபதி ரகுபதி தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைத்தது. அவர், விபத்து நேர்ந்த இடம், கட்டிட
உரிமையாளர், பணியாளர்கள், இஞ்சினியர்கள் என்று அனைவரிடமும் விசாரித்து,இன்று அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார்,.

இந்த அறிக்கையை முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் தயாரித்து, இன்று அவரிடமே நீதிபதி ரகுபதி தாக்கல் செய்துள்ளார். மவுலிவாக்கம் கட்டிட விபத்து நேர்ந்ததை அடுத்து, சென்னையில் கட்டப்பட்டு வரும் அடுக்கு மாடிக்கட்டிடங்கள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படுவது குறிப்பிடத் தக்கது.

Related Posts:

«