சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு

சென்னை போரூர் அருகே மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இடிபாடுகளில் சிகியவர்களைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.


சென்னை மவுலிவாக்கத்தில் நேற்று மாலை 11 அடுக்கு மாடிக்கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து தரைமட்டமானது. குடியிருப்புக்கட்டிட்டமான இது, கட்டுமானப் பணிகள் இன்னமும் முடிவடையாத நிலையில், பணியாளர்கள் வேலைப்பார்த்துக் கொண்டிருக்கும் போது, திடீரென இடிந்து விழுந்துள்ளது.

இங்கு 100க்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் வேலைப்பார்த்துக் கொண்டிருந்தனர் என்றாலும், நேற்று கட்டிடத்தில் வேலைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் எத்தனை பேர், இடிபாடுகளில் சுமார் எத்தனை பேர் சிக்கியிருக்கலாம் என்று தகவல் யாருக்கும் தெரியவில்லை.

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இருந்து இங்கு வேலைப்பார்ப்பவர்களும், ஹைதராபாத்தில் இருந்து இங்கு வந்து வேலைப்பார்ப்பவர்களும் என்று சுமார் 100 பேர் வேலைகளைப் பார்த்து வந்தனர் என்றும் தெரிய வருகிறது. தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் விடிய விடிய மீட்புப்பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். பலியானவர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts:

«