சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு?

சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


சென்னை மவுலிவாக்கம் 11 அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இந்த கற்குவியலில் தோண்டத் தோண்ட பிணங்களாக வந்துக் கொண்டிருக்கிறது என்று மீட்புப் பணியில் ஈடுப்பட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில் இந்தக் கட்டிட விபத்தில் சிக்கிப் பலியானவர்கள் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில் இடிந்து விழுந்த கட்டிடங்களில் வீடுகளை வாங்கிய உரிமையாளர்கள் மிகவும் கலக்கத்தில் உள்ளனர். 67 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும், வீட்டின் உரிமையாளர்கள் இதுவரை 59 லட்சம்ரூபாய் காட்டியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். இந்தப் பணத்தைத் திரும்பப் பெற முடியுமா எனபது இவர்களின் கலக்கமாக உள்ளது.

Related Posts:

«