சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்துக் குறித்த அறிக்கைத் தாக்கல்

சட்டப்பேரவையில் இன்று சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்துக்குறித்த அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது.


கடத்த 2014ம் ஆண்டு சென்னை மவுலி வாக்கத்தில் 11 மாடி அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்று கட்டுமானப் பணிகள் முடிவு பெறாத நிலையில், கட்டிடம் திடீரென்று தரை மட்டமானது.இதில் அவற் இந்தியத் தொழிலாளர்கள் மற்றும் ஆந்திர தொழிலாளர்கள் பலியான நிலையில் கட்டிட விபத்துக்குக் காரணம் என்ன என்று ஆராய ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைத்து விபத்துக் குறித்த விரிவான அறிக்கைத் தாக்கல் செய்ய தமிழக அரசு உத்தரவுப் பிறப்பித்தது.

மேலும், இதை சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் இன்னமும் சமர்ப்பிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பத் துவங்கின. இந்நிலையில் இன்று கூடிய சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் ஒய்வுபெற்றத் தலைமை நீதிபதி சார்பில் முகிலிவாக்கம் கட்டிட விபாத்துக் குறித்த அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில், முகிலிவாக்கம் கட்டிட விபத்துக்குக் காரணம்முறையான அனுமதி இன்றி, முறையானக் கட்டுமானப் பொருட்களுடன் கட்டப்படாததே காரணம் என்று கூறப்பட்டு உள்ளது.மேலும் இதே போன்று விதிமுறைகளைப் பின்பற்றாமல் முகிலிவாக்கம் கட்டிட விபத்துக்கு அருகில் கட்டப்பட்டு இருக்கும் 11 மாடிக் கட்டிடத்தை நவீன தொழில் நுட்பக் கருவிகளின் துணையோடு உடைக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

அதுமட்டுமின்றி கட்டிட உயிரிழந்தவர்கள், காயம் அடைந்தவர்கள், பணத்தைக் கொடுத்து வீட்டை வாங்க முதலீடு செய்தவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்றும் தனி நபர் கமிட்டிப் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்து உள்ளது.மேலும் இதுபோன்ற அடுக்குமாடிக் கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்றால் அவற்றை குழு அமைத்துக் கண்காணிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டும் உள்ளது.

Related Posts:

«