சென்னை, மவுலிவாக்கம் 2வது கட்டிடம் நாளை மறுதினம் இடிக்கப்படுகிறது – சிஎம்டிஏ

சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள அபாயகரமான 2வது கட்டிடம் நவம்பர் 2 ஆம் தேதி இடிக்கப்படும் என சிஎம்டிஏ தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை, போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த 11 மாடி கட்டிடம், கடந்த 2014 ஜூன் 28ம் தேதி பெய்த மழையின்போது திடீரென இடிந்து விழுந்தது. இதில் கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த வெளி மாநில பணியாளர்கள் உட்பட 61 பேர் உயிரிழந்தனர்.

Demolition of second building to begin in Moulivakkam

இதனிடையே அதன் அருகே உள்ள மற்றொரு 11 மாடிக் கட்டிடத்தை இடிக்க வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், ஆபத்தான நிலையில் உள்ள இரண்டாவது கட்டிடத்தை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடம் நவம்பர் 2ம் தேதி இடிக்கப்படுகிறது.

நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டிடம் இடிக்கப்படும் எனவும் பிற்பகல் 2 மணி முதல் 4 மணிக்குள் கட்டிடம் இடிக்கப்படும். கட்டிடம் இடிக்கப்படுவது குறித்து அப்பகுதி மக்கள் அச்சப்படத் தேவையில்லை என சி.எம்.டி.ஏ. தெரிவித்துள்ளது. பருமழை தொடங்கும் முன்பே கட்டிடத்தை இடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source http://feedproxy.google.com/~r/oneindia-thatstamil-all/~3/_zVbsgFeneE/demolition-second-building-begin-moulivakkam-266079.html

Related Posts:

«