சென்னை முகிலிவாக்கம் கட்டிடம் இடிந்து விழுந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவு!

61 பேரை பலி வாங்கிய சென்னை முகிலிவாக்கம் கட்டிடம் இடிந்து விழுந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 


கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 28ம் திகதி சென்னை முகிலிவாக்கத்தில் கட்டுமானப் பணியிலிருந்த 11 அடுக்கு மாட்டிக் கட்டிடம் ஒன்று இடிந்து தரை மட்டமாகியது. இதில் பணியாளர்கள் 61 பேர் பலியாகினர். இதையடுத்து இதற்கு அருகில் கட்டப்பட்டு வரும் மற்றும் ஒரு 11 அடுக்குமாடிக் கட்டிடத்தையும் இடிக்க வேண்டும் என்று அங்குள்ள பொது மக்கள் கோரிக்கை வைத்தனர். 

இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கும் சென்றது. உச்ச நீதிமன்றம் தனிக்குழுவை நியமித்து,ஆய்வுகள் நடத்திய நிலையில்,கட்டிடம் வலுவாக இல்லை என்றும், கட்டிடத்தைஇடிப்பதே சிறந்த வழி என்றும் அந்தக் குழு அறிக்கைத் தாக்கல் செய்தது. 

இதையடுத்து உச்ச நீதிமன்றம் கட்டிடத்தை இடிக்க பிறப்பித்தது. எனவே, இந்தக் கட்டிடத்தை இடிக்கும் பணிகளை இன்று மாவட்ட ஆட்சியர்  தலைமையில் வெளி நாட்டிலிருந்து வந்துள்ள நிபுணர்கள் குழூவை வைத்து கட்டிடத்தை வெடிகுண்டுகள் வைத்துப் புதைத்து ஒரே சமயத்தில் தரை மட்டமாக இடிக்கும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டிடத்தை இடிக்கத் திட்டமிட்டு உள்ளனர். இன்று வெடிக்குண்டுகளைப் புதைக்கும் பணிகள் துவங்கி உள்ளன. கட்டிடத்தை இடிக்கும்போது சுமார் 100 மீட்டர் தொலைவுக்கு மக்கள் நடமாட்டம் கூடாது என்பதால், பொதுமக்களைக் கட்டுக்குள் வைக்கவும் போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

Related Posts:

«