சொந்த ஊரில் நாளை விளையாடப்போகும் தோனி!

இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனியின் தகுதியை விமர்சிப்பது, சச்சினை விமர்சிப்பதற்கு சமம் என அவரது முன்னாள் பயிற்சியாளர் சன்ச்சல் பட்டாச்சாரியா தெர்வித்துள்ளார்.


அண்மைக்காலமாக இந்திய அணி டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு நாள் போட்டிகளிலும் தொடர்ச்சியாக தோல்வி தழுவி வந்தமைக்கு இந்திய கேப்டன் தோனியும் ஒரு காரணமும் எனவும், அவரை கேப்டன் பதவியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டுமெனவும், முன்னாள் கிரிக்கெட்டர்கள் பலர் விமர்சித்திருந்தனர்.

இந்நிலையில், தோனியின் முதல் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளரான சன்ச்சல் பட்டாச்சார்யா இக்கருத்துக்களுக்கு கொஞ்சம் தாமதமாக தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.  கால் பந்து போட்டியில் கோல் கீப்பராக இருந்த தோனியை இவர் தான் கிரிக்கெட்டுக்கு களமிறக்கினாராம்.  தோனிக்கு எதிரான விமர்சனங்கள் குறித்து பட்டாச்சார்யா கூறியது:

தோனியின் கேப்டன் திறமை பற்றி கவாஸ்கர் கேள்வி எழுப்பினார். பின் கொச்சி ஒருநாள் போட்டியில் இந்தியா வென்றதும், தோனியைவிட சிறந்த கேப்டன் யாரும் இல்லை என்று அவரே மாற்றி சொன்னதாக கேள்விப்பட்டேன்.விமர்சனங்கள் வரவேற்கத்தக்கது. ஆனாலும், இது பயனுள்ளதாக அமைய வேண்டும். ஒவ்வொரு நாளும் வெற்றி நாளாக அமையாது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். டுவென்டி-20, 50 ஓவர் உலக கோப்பை, டெஸ்டில் நம்பர்-1 உள்ளிட்ட பெருமைகளை தோனிதான் பெற்றுத்தந்தார். இப்படிப்பட்டவரை குறை சொல்வது என்பது, சச்சினின் ரன் எடுக்கும் திறமையை சந்தேகிப்பதற்கு சமம்.வரும் 2015ல் நடக்க உள்ள உலக கோப்பையை போட்டியை கருத்தில் கொண்டு, ஏதாவது ஒரு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது பற்றி தோனி கண்டிப்பாக சிந்திப்பார்.

ராஞ்சியில் நாளை நடக்கவுள்ள போட்டியை நினைத்து, ஒரு பயிற்சியாளராக பதட்டமாக உள்ளேன். இந்தப் போட்டியில், தோனி சிறப்பாக விளையாடுவதோடு, அணியும் வெற்றி பெற, கடவுளை வேண்டுகிறேன். சொந்த ஊரில் விளையாடுவதால், தோனியும் கடும் நெருக்கடிக்கு உள்ளாவார். இருப்பினும், கூலாக செயல்பட்டு, பல்லாயிரம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடுசெய்வார் என நம்புகிறேன்.

இவர் படித்த ஜவஹர் வித்யா மந்திர் பள்ளிக்கு, எப்போதும் செல்வேன். 1995ல் இவரை, முதன் முறையாக பார்த்தபோது, கால்பந்து விளையாட்டின் கோல் கீப்பராக இருந்தார். கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக விளையாட விருப்பமா ? என கேட்டேன். முதல் போட்டியில் பேட்டிங் வரிசையில் 9வது இடத்தில் வந்தார். தவிர, விக்கெட் கீப்பராகவும் சிறப்பாக செயல்பட்டார் என்றார்.

Related Posts:

«