டயானாவின் இறுதி ஒலிச் செய்திகள் ஹேக் செய்யப்பட்டன – முன்னால் காதலர்

பிரிட்டனின் புகழ் பெற்ற காலஞ் சென்ற வேல்ஸ் இளவரசி டயானாவின் மிக முக்கியமானதும் தனிப்பட்டதுமான ஒலிப் பதிவுகள் (செய்திகள்) அவரின் இறப்புக்குச் சில மாதங்களுக்கு முன்னர் ஹேக் செய்யப் பட்டதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.


இத்தகவலைப் பாகிஸ்தானின் மருத்துவரும் டயானாவின் முன்னால் காதலருமான ஹஸ்னட் கான் வெளியிட்டுள்ளார்.

53 வயதுடைய ஹஸ்னட் கான் இருதய மற்றும் நுரையீரல் சிகிச்சை நிபுணர் ஆவார். இவருக்கும் இளவரசி டயானாவுக்கும் இடையே இரண்டு வருட உறவு இருந்தது. இந்நிலையில் 1996 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே இவரது தொலைபேசிக்கு டயானா விடுத்த அழைப்புக்களும் உரையாடல்களும் சட்டத்துக்கு விரோதமாக 2007 இல் ஹேக் செய்யப் பட்டதாக இவர் ஸ்காட்லாந்து யார்ட் புலனாய்வுத் துறைக்குப் புகார் அளித்துள்ளார். எனினும் ஹஸ்னட் கானுக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து கசியப் பட்ட தகவல்களின் படி இந்த ஹேக்கிங் 10 வருடங்களுக்கு முன்னமேயே தொடங்கியிருக்கலாம் எனவும் அச்சந்தர்ப்பத்தில் இவர் டயானாவுடனான கொண்டிருந்த ரகசியத் தொடர்பு அம்பலமாகி விடும் என்ற பயத்தில் இன்று வரை இவர் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Dr.கான் மேலும் தெரிவிக்கையில், ‘இளவரசி டயானா மிக அழகிய தோற்றமும் செயற்பாடும் உடையவர். இவருடன் தான் கொண்டிருந்தது நெருங்கிய நட்பு மட்டுமே. எனினும் எமது சொந்த விடயத்தில் சட்ட விரோதமாக புகுந்து எமது உறவைக் கொச்சைப் படுத்த நினைப்பது மிகப் பெரும் தவறு. இந்த ஹேக்கிங் சர்வதே குற்றச் செயல் ஆகும் என்றார். மேலும் தனது சொந்த தனிப்பட்ட விவகாரங்களை ஹேக் பண்ணியது எனக்கு மிகப் பெரிய கோபத்தை உண்டாக்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Dr.கான் 1995 ஆம் ஆண்டு இளவரசி டயானா ரோயல் ப்ரொம்ப்டொன் வைத்தியசாலைக்கு வருகை தந்த போது அங்கு முதன்முறை அவரைச் சந்தித்தார். இதனை அடுத்து இருவருக்கும் இடையே நட்பு உண்டானது. 1997 இல் பாரிஸ்ஸில் விபத்தில் சிக்கி இளவரசி டயானா இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு வரை இவர்களின் நட்பு நீடித்ததாகக் கூறப்படுகின்றது.

இச்சம்பவத்தை அடுத்து மலேசியாவுக்கு இடம்பெயர்ந்த Dr.கான் அங்கு சில காலம் செய்த பின் தனது தேசத்துக்குத் திரும்பினார். மேலும் தனது சொந்த நகரமான ஜெலும் இல் சிறுவர்களுக்கன இருதயப் பிரிவு மருத்துவ மனை ஒன்றையும் திறந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts:

«