டுவெண்டி 20 சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது சிட்னி சிக்சர்ஸ்

Sunday, 28 October 2012 20:55

லயன்ஸ் – சிட்னி சிக்சர்ஸ் அணிகளுக்கு இடையில், இன்று நடைபெற்ற சாம்பியன் லீக் இறுதி போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் அணி இலகுவாக வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் 2012 இன் சாம்பியன் கோப்பையையும் கைப்பற்றியது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லயன்ஸ் அணி 20 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 121 ஓட்டங்களை எடுத்தது. ஒரு கட்டத்தில் 32 ரன்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்திருந்ததது. எனினும் சிம்ஸ், 51 ஓட்டங்களை எடுத்து அணியை வீழ்ச்சியிலிருந்து மீட்டார். தெ.ஆபிரிக்காவின் முன்னணி கிளப் அணிகளில் லயன்ஸ் அணி ஒன்றென்பதுடன், போட்டி நடைபெற்று வந்ததும் தெ.ஆபிரிக்காவில் என்பதால் ரசிகர்களின் பலத்த ஆதரவு இருந்தது.

எனினும் சிட்னி சிக்சர்ஸ் அணி 12.3 ஓவர்களில் எந்தவொரு விக்கெட்டையும் இழக்காது வெற்றி இலக்கை கடந்தது. லம்ப் 82 ஓட்டங்களையும், ஹடின் 37 ஓட்டங்களையும் எடுத்தனர்.

இன்றைய போட்டி நாயகனாக லம்ப் தெரிவானார்.

Related Posts:

«