டெங்கு விழிப்புணர்வு… தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட புதிய செல்போன் ஆப்- வீடியோ

சென்னை: சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய் விழிப்புணர்வுக்கான புதிய செல்போன் அப்ளிகேசனை தமிழக சுகாதாரத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த அப்ளிகேஷனை அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், இந்திய மருத்துவம்- ஹோமியோபதி துறை ஆணையர் மோகன் பியாரே, பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த புதிய அப்ளிகேஷன் மூலம் செல்போனிலேயே, தமிழகத்தைத் தாக்கும் கொசுக்கள், அதன் தன்மைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைப் பெற முடியும்.

வீடியோ:

Source http://feedproxy.google.com/~r/oneindia-thatstamil-all/~3/ny5l1UyPCIM/dengue-awareness-tamil-nadu-govt-launches-new-app-265999.html

Related Posts:

«