டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபரானால் ஆபத்து! : ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

டொனால்டு டிரம்ப் எந்தவொரு அரசியல் பிரச்சாரத்திலும் முறையாக நடந்து கொள்ளவில்லை என புதன்கிழமை ஜெனீவாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் அல் ஹுஸ்ஸெயின் தெரிவித்துள்ளார்.  மேலும் டிரம்ப் ஏற்கனவே தெரிவித்து வரும் கருத்துக்களில் இருந்து இவர் அதிபர் ஆனால் ஆட்சியில் அவை நடைமுறைக்கு வரும் சாத்தியம் இருக்கும் பட்சத்தில் சர்வதேசத்தின் பார்வையில் இது மிகுந்த ஆபத்தைக் கொண்டு வரும் எனக் கணிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கியமாக பெண்கள், முஸ்லிம்கள், குடியேறிகள் மற்றும் சிறுபான்மையினத்தவர் மீதான டிரம்பின் தாக்குதல் கருத்துக்கள் மனித உரிமைகளை அவமதிப்பதாக உள்ளதையும் அல் ஹுஸ்ஸெயின் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் டொனால்டு டிரம்பை ஹங்கேரி பிரதமர் விக்டர் ஒர்பன், பிரான்ஸ் தேசிய முன்னணி தலைவர் மாரினே லே பென் மற்றும் பிரிட்டனின் முன்னணி Brexit பிரச்சாரர் நிகெல் ஃபராஜே  ஆகியோருடன் ஒப்பிட்டும் மனித உரிமைகள் தலைவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குடியரசுக் கட்சியின் பிரதம வேட்பாளரான டொனால்டு டிரம்ப் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருவதால் தனது கட்சியின் சொந்த உறுப்பினர்கள் மீதே கவனத்தைத் திருப்பியுள்ளார். அதாவது செவ்வாய்க்கிழமை தனது கட்சியின் முக்கிய உறுப்பினர்களுக்கு எதிராக டுவீட் செய்தும் ஊடக நேர்காணல்களில் கருத்துத் தெரிவித்தும் இருந்தார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

Related Posts:

«