டோணி சொந்த ஊரில் இன்று 4வது ஒருநாள் போட்டி.. தொடரை கைப்பற்றுமா இந்தியா?

ராஞ்சி: இந்தியா-நியூசிலாந்து நடுவேயான 4வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா வென்றால் தொடரை கைப்பற்றும்.

இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் தர்மசாலாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், மொகாலியில் நடந்த 3வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. டெல்லியில் நடந்த 2வது போட்டியில் நியூசிலாந்து அணியிடம், இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Preview: 4th ODI: India Vs New Zealand in Ranchi on October 26

இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்துவரும் நிலையில், 4வது ஒரு நாள் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று, பகல்-இரவு ஆட்டமாக நடைபெற உள்ளது.

இன்றைய ஆட்டத்திலும் வென்றால் இந்தியா தொடரை கைப்பற்றும். கேப்டன் டோணியின் சொந்த ஊரில் போட்டி நடைபெறுகிறது என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

பேட்டிங்கில் டோணி, கோஹ்லி இருவரும் சிறப்பாக செயல்படுகிறார்கள். ஓப்பனிங் இன்னமும் கிளிக் ஆகவில்லை. பந்து வீச்சை பொறுத்தவரை அமித் மிஸ்ரா அதிகபட்சம் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்திலுள்ளார்.

உமேஷ் யாதவ் மற்றும் கேதர் ஜாதவ் தலா 6 விக்கெட்டுகளையும், பும்ரா 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். நியூசிலாந்து அணியை பொறுத்தவரை டாம் லாதம், கேப்டன் வில்லியம்சன் ஆகியோரை அணி மிகவும் நம்பிக்கொண்டுள்ளது.

இந்திய மண்ணில் இதுவரை ஒரு நாள் தொடரை வென்றதில்லை நியூசிலாந்து அணி, என்பது குறிப்பிடத்தக்கது.

Source http://feedproxy.google.com/~r/oneindia-thatstamil-all/~3/UhzwipFcOCk/preview-4th-odi-india-vs-new-zealand-ranchi-on-october-26-265732.html

Related Posts:

«