தனியார் மின் உற்பத்தி நிலையத்திற்கு எதிராக போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

சுண்ணாகம் சிவன்கோவிலுக்கு முன்பாக பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் வைத்தியர்கள், அரசியல் கட்சிகள் இணைந்து உண்ணாவிரதத்தினை நடத்தியிருந்தனர்.

கடந்த 4 நாட்களாக குறித்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றிருந்த நிலையில், யாழ்.சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமையத்தினர் போராட்டத்தைக் கைவிடுமாறு விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் மேற்படி போராட்டத்தை ஒழுங்கமைத்திருந்த, வைத்திய கலாநிதி செந்தூரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

யாழ்.சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமையத்தினர் தெற்கில் உள்ள அமைச்சர்கள் மற்றும் பிரதமரின் செயலாளர் ஆகியோருடன் 23ம். 24ம் திகதிகளில் நடத்திய சந்திப்புக்களில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் படியும், அவர்கள் போராட்டத்தை கைவிடுமாறு, விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் அடுத்த கட்டமாக மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்த ஒரு அமைப்பின் ஊடாக பாரியளவிலான போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் தெரிவித்தார்.

Related Posts:

«