தமிழக அரசு அதிகாரிகள் ஊழல் செய்தால் அரசின் அனுமதியின்றி விசாரிக்க முடியாது?:வழக்கு

தமிழக அரசு அதிகாரிகள் ஊழல் செய்தால் அரசின் அனுமதியின்றி விசாரிக்க முடியாது என்கிற தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.


வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக மனுத் தொடுத்து உள்ளார். அந்த மனுவில், லஞ்ச புகாருக்கு உள்ளான ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட தமிழக அரசு அதிகாரிகளை புலனாய்வு பிரிவு விசாரிக்க வேண்டும் என்றால், தமிழக சட்டப்பேரவை செயலாளரிடம் அனுமதி பெற வேண்டும் என்கிற தமிழக அரசின் அரசாணை பாரபட்சமானது என்றும், இது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்றும் மனுதாரர் தரப்பில் எடுத்துவைக்கப்பட்டது.

மேலும், இது லஞ்சத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது என்றும், சட்டப்பேரவை செயலர் ஞான தேசிகன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றும் மனுதாரர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து மனுதாரரின் கோரிக்கைகளை எழுதி விண்ணப்பமாகத் தர வேண்டும் என்றும் கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை மார்ச் 18ம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

 

Related Posts:

«