தமிழக மீனவர்களுக்கு AK47, 56 ரக துப்பாகிகள் வேண்டும்! வேல்முருகன் கோரிக்கை

தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளையும் விடுவிக்கக் கோரி இலங்கை தூதரகம் முன்பு தமிழர் வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றும் முதலுமாக பாதிக்கப்பட்டதாக தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

எனினும், இந்திய அரசு இது குறித்து சற்றும் கவலை படவில்லை. தமிழக மீனவர்களின் போராட்டங்களை ரசிக்கின்ற வகையில் ஈடுபட்டு வருகின்றது.

அத்துடன், தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பெற்றுத்தர இந்திய அரசு மறுக்கின்றது.

இப்பிரச்சினைக்கு ஒரே ஒரு தீர்வு கச்சத்தீவு மீட்கப்படவேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு, தமிழக மீனவர்களின் வேண்டுகோள்.

எவ்வாறாயினும், இந்த வேண்டுகோளை மத்திய அரசு மதிப்பதாக தெரியவில்லை.

இது குறித்து தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுபினர்களும் குரல் எழுப்பியபோது ஜனநாயக ரீதியாக சரியான பதிலை இந்திய பேரரசு எமது மக்களுக்கு அளிக்கவில்லை.

இதேவேளை, தமிழக மீனவர்கள் வஞ்சிக்க படுவதும், சுட்டு படுகொலை செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடரந்தும் இடம்பெற்றவாறு இருக்கின்றது.

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கவேண்டும் என்று போராடிக்கொண்டு இருக்கும்போதும், இன்றும் நாகப்பட்டினம் மற்றும் இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இலங்கை கடற்படையினாரால் கைது செய்யப்பட்டு இருகிறார்கள்.

கைது செய்வதற்கு எல்லை தாண்டுகிறார்கள் என்று காரணம் கூறப்படுகின்றது, ஆனால் இலங்கை கடற்படையினர் இந்திய எல்லைக்குள் வந்து தமிழக மீனவர்களை கைது செய்து சென்றிருகிறார்கள்.

எவ்வாறாயினும், இந்திய நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடத்தி கச்சதீவை மீட்டு தமிழக அரசிடம் கையளிக்க வேண்டும்.

நாட்டு படகு மீனவர்களை கைது செய்யகூடாது என்று இலங்கை அரசுக்கு கடுமையான உத்தரவிட வேண்டும். தமிழக பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிக்க அனுமதி அளிக்கவேண்டும்.

அப்படி இல்லையென்றால் இந்திய என்ற நாட்டில் தான் தமிழகம் இருகின்றது என்ற கேள்வி தமிழ் நாட்டில் மிக வேகமாக எழுகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts:

«