தமிழக முதல்வரின் துறைகள் ஓ.பீ.எஸ்ஸூடம் ஒப்படைக்க காரணம் என்ன..? அதிரவைக்கும் பதிவு

தமிழக முதல்வர் ஜெயலலிதா பொறுப்பிலிருந்த அனைத்து துறைகளும், அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டதற்கு நானே காரணம் என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர் இந்த விடயத்தினை கூறியுள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைபாடு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமுல்படுத்த வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய விவகாரம் பரபரப்பை கிளப்பியது.

இந்நிலையிலேயே, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்த துறைகள் தற்போது அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

அமைச்சரவையின் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டதற்கு, ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்த நான் விடுத்த கோரிக்கையே காரணம். அதன்பின்பு தான், ஆளுநர் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார் என குறிப்பிட்டு அதிர வைத்துள்ளார்.

Related Posts:

«