தமிழக முழுவதும் 762 பட்டாசு விபத்துகள்.. பல லட்சம் சேதம்!!

சென்னை: தீபாவளி பண்டிகை தினமான நேற்று மட்டும் தமிழகம் முழுவதும் சுமார் 762 இடங்களில் பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் சென்னையில் மட்டும் 123 இடங்களில் பட்டாசு வெடி விபத்துகள் ஏற்பட்டன.

தீபாவளி என்றாலே பட்டாசு தீ விபத்து என்பதும் கூடவே வந்துவிடுகிறது. நேற்று திருவண்ணாமலையில் நடைபெற்ற ஒரு பட்டாசு தீ விபத்தில் ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான குடிசை வீடு எரிந்து 2 லட்சத்திற்கும் அதிகமான பொருட்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன.

792 Crackers fire accident in Deepavali festival

இதுபோன்று, சென்னையை அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் பட்டாசு வெடிக்கப்பட்ட போது ஏற்பட்ட தீ விபத்தில் சரஸ்வதி என்ற கூலித்தொழிலாளி பெண்ணின் குடிசை வீடு பற்றி எரிந்தது. இதில் அவர் சேர்த்து வைத்திருந்த 10 சவரன் நகை மற்றும் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.

நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையத்தில், தீபாவளி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தீ விபத்தில் விசைத் தறி மற்றும் சாயப்பட்டறையில் தீ விபத்து ஏற்பட்டு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் மற்றும் நெசவு நூல்கள் எரிந்து கருகின.

இதே போன்று தமிழகம் முழுவதும் சுமார் 792 இடங்களில் பட்டாசு விபத்து ஏற்பட்டு பல லட்ச ரூபாய் சேதத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியது. இதில் சென்னையில் மட்டும் 123 இடங்களில் பட்டாசு விபத்துகள் ஏற்பட்டதாகவும், இது கடந்த ஆண்டை விட மிக மிக அதிகம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்துகள் பெரும்பாலும் ராக்கெட் வெடிகளால் ஏற்பட்டுள்ளன. 379 தீ விபத்துகள் ராக்கெட் வெடிகள் வெடித்ததால் மட்டுமே நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Source http://feedproxy.google.com/~r/oneindia-thatstamil-all/~3/zzWl6xIgHV4/792-crackers-fire-accident-deepavali-festival-266008.html

Related Posts:

«