தமிழக விவசாயிகள் டெல்லியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்!

தமிழக விவசாயிகள் டெல்லியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இன்று டெல்லி புறப்பட்டு உள்ளனர். 


தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர், மத்திய மாநில அரசுகள், விவசாயிகளுக்கான நஷ்டத்தைக் கணக்கில் கொள்வதில்லை என்றும், பல வருடங்களாக நஷ்டத்தை சந்தித்து வரும் தங்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதில்லை என்றும் தமிழக விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். 

எனவே, மேற்கண்ட கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகிற 23ம் திகதி முதல் டெல்லியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளனர். இதற்காக இன்று திருச்சியில் இருந்து ரயில் மூலம் இவர்கள் இன்று டெல்லி புறப்பட்டு உள்ளனர். ரயிலில் மத்திய அரசு மற்றும் மாநில அரசை வலியுறுத்தும் வகையில் பல வாசகங்கள் அடங்கிய பதாகைகளை விவசாயிகள் கையில் வைத்திருந்தனர் என்பதுக் குறிப்பிடத் தக்கது.

 

Related Posts:

«