தமிழக விவசாய சங்கங்கள் எதிர்வரும் ஆறாம் திகதி போராட்டத்தில் குதிக்க தீர்மானம்!

கர்நாடக அமைப்புக்களுக்கு எதிராக வருகிற ஆறாம் திகதி தமிழக விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். 


கடந்த 28ம் திகதி கர்நாடகாவில் உள்ள விவசாய அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து.காவிரியின் குறுக்கே மேகதாதுவில் தடுப்பணைக் கட்ட வேண்டும் என்று பூமி பூஜை செய்தனர்.இந்நிலையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக மேகதாதுவில் அணைக் கட்டக் கூடாது என்று கோரிக்கை வைத்து வருகிற 6ம் திகதி தமிழக விவசாய அமைப்புக்கள் முழு அடைப்புப் போராட்டம் நடத்த உள்ளனர். 

தங்களுக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், அரசியல் கட்சிகள் ஆதரவையும் கேட்க உள்ளதாகவும் இந்த விவசாய சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். கடந்த 24ம் திகதி முதல் 28ம் திகதி வரை திருச்சியை சேர்ந்த விவசாயிகள் டெல்லி சென்று அங்கு நதி நீர் இணைப்பு, விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன் வைத்துப் போராட்டம் நடத்தினர். இன்று சென்னை திரும்பிய இவர்கள் தங்களை தமிழக அரசு கண்டுக்கொள்ளவில்லை என்று கூறி, ரயில் நிலையத்தில் தூக்கு போடும் போராட்டம் நடத்தினர். உடனடியாக அங்கு விரைந்த போலீசார் இவர்களைக் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

 

 

Related Posts:

«