தமிழன்னையை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கௌரவப்படுத்தியுள்ளனர் – கிழக்கு மாகாண கலாசார பணிப்பாளர்

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா மூலம் தமிழன்னையினை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கௌரவப்படுத்தியுள்ளதாக கிழக்கு மாகாண கலாசாரப்பணிப்பாளர் சிவப்பிரியா வில்வரெட்னம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாபெரும் தமிழ் இலக்கிய இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பில் ஆரம்பமானது.

இன்று காலை கிழக்கு மாகாண கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் சிவப்பிரியா வில்வரெட்னம் தலைமையில் பெரும் கலாசார பேரணி மட்டக்களப்பு கல்ல, உப்போடையில் உள்ள விவேகானந்தரின் சமாதியில் இருந்து நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து இன்று மாலை மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரியின் ஒன்றுகூடல் மண்டபத்தில் கலைகலாசார நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.

இதன் போது தொடர்ந்து உரையாற்றிய பணிப்பாளர், கிழக்கு மாகாணம் இரு மொழிகள் பேசுகின்ற நான்கு மதங்களை உள்ளடக்கிய பன்மைத்துவம் கொண்ட மாகாணம்.

இதனால் பன்முக கலை பாரம்விழுமியங்களும் பன்முக இலக்கிய படைப்புகளும் இயல்பாகவே மக்கள் மத்தியில் ஊண்றிகாணப்படுப்படுகின்றது.

சுகமும் சோகமுமே இலக்கியங்களை தோற்றுவித்தது. சுறாவளி அனர்த்தங்களினால் காவியத்தினையும் சுனாமி அனர்த்தங்களினால் அகவலையும், இடப்பெயர்வின்போது அம்மானையும் எழுதியவர்கள் கிழக்கிலங்கையின் ஆக்க இலக்கியகர்த்தாக்கள்.

ஒரு இனத்தின் அடையாளமாக அந்த இனத்தின் சான்றோர்கள் காணப்படுகின்றனர். கிழக்கு மாகாணத்தில் இருமொழிபேசும் மக்கள் உள்ளனர்.

தமிழானது பழமையும் செழுமையும் மிக்க ஒரு மொழியாகும்.தனக்கென ஒரு தனி இடத்தினை தக்கவைத்துக்கொள்வதும் செம்மொழி அந்தஸ்துடன் உயர்ந்து நிற்பதும் தமிழ் பேசும் மக்களுக்கு வரப்பிரசாதமாகவுள்ளது.

கல்தோன்றி மண்தோன்றா காலத்திற்கு முற்பட்டது தமிழ் மொழி என்பதும், இனிமையானதும் என்பதும் தமிழ் பேசும் மக்களை பெருமைகொள்ளச்செய்கின்றது. இதற்கு வித்திட்டவர்கள் எமது முன்னோர்கள் என்னும்போது அவர்கள் போற்றப்படவேண்டியவாகளாகவுள்ளனர்.

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா இம்முறை மட்டக்களப்பில் நடைபெறுவது இந்த மாவட்டத்திற்கு பெருமையினையும் சிறப்பினையும் ஏற்படுத்துகின்றது.

படுவான் -எழுவான் பிரதேசங்களை ஊடறுத்துச்செல்லும் மட்டக்களப்பு வாவி அதில் மிளிறும் பாடுமீன்கள் தொழிலிலும் வாழ்வியலிலும் பண்பாட்டியில்புகளை பேணும் மட்டக்களப்பு நகர் மக்கள்.

வந்தாரை வாழவைத்தவர்கள் மட்டுமல்ல மற்றவர்களையும் ஆதரித்து பழக்கப்பட்டவர்கள்.மற்றவர்களை ஆதரித்து பழகிய மக்களினால் இலக்கியம் சிறப்புற்று விளங்குகின்றது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பேசும் மக்களின் கலைகலாசார பண்பாடுகளை இன்று கண்ணாடி போட்டு காட்டியுள்ளது கலாசார பவனி.தமிழன்னையை இன்று மட்டக்களப்பு மக்கள் கௌரவப்படுத்தியுள்ளனர்.

Related Posts:

«