தமிழ்ப் பெண்கள் இராணுவத்தில் எந்த அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்: சிறீதரன் எம்.பி நாடாளுமன்றில் கேள்வி

இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் மகளிர் விவகார சிறுவர் அபிவிருத்தி அமைச்சின் குழுநிலை விவாதத்தின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடரந்து உரையாற்றுகையில்,

கிளிநொச்சி பாரதிபுரத்திற்கு அண்மையில் சென்ற இராணுவத்தினர் முன்னாள் போராளிகளாக இருந்த பெண்கள் மற்றும் வறுமையில் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை சந்தித்து இராணுவத்தில் கணனி பயிற்சிகள், லிகிதர் வேலை வாய்ப்புகள் வழங்குவதாகவும் அதிக சம்பளம் வழங்கப்படும் என்றும் கூறி பெண்களை அழைத்துச் சென்று 103 தமிழ் பெண்களை இராணுவத்தில் இணைத்துக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு பெண்களை நேரடியாக இராணுவத்தில் இணைத்துக் கொள்ளவதற்கு இப் பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளதா? இராணுவத்திற்கு எந்த அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.

எவ்விதமான வர்த்தமானி அறிவித்தலும் இல்லாமல், கிளிநொச்சியில் பெண்கள் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts:

«

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *