தல படத்துக்கு அனிருத் இசை?

இசையமைப்பாளர் அனிருத்தின் வளர்ச்சி என்பது மிக அபாரமானதாக இருக்கிறது. தமிழில் நடிகர் விஜய், தனுஷ்,என்று முன்னணி ஹீரோக்கள் படத்தில் அனிருத் இசை அமைத்து வர, தெலுங்கு,மலையாள படங்களிலும் இவரது இசைக்கு பிரபலங்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.


இந்த நேரத்தில்தான் சிறுத்தை சிவா தமது அடுத்த படத்தை அஜீத்தை வைத்து இயக்க உள்ளார். வீரம் தந்த வெற்றியைத் தொடர்ந்து என்னை அறிந்தால் படம் சிகரம் தொட்டுவிட அடுத்த படத்தின் வேலைகள் சுறுசுறுப்புடன் தொடங்கி, இப்போது படத்தின் இசை அமைப்பாளர் அனிருத் என்று முடிவாகி உள்ளது.

அஜீத்தின் ஸ்டைலிஷ் நடிப்பில் பின்னணி இசை தூள் கிளப்பிவிட வேண்டும் என்பது சிறுத்தை சிவாவின் வேண்டுகோள். அனிருத்தும் தல ரசிகர்களை ஈர்க்க தமக்கு ஒரு களம் கிடைத்துள்ளது, அடிச்சு தூள் கிளப்பணும் என்கிற முனைப்பில் இருக்கிறாராம்.

Related Posts:

«