தாய்லாந்து முன்னால் பிரதமர் சினாவத்ரா மீது குற்ற விசாரணை!:5 ஆண்டுகளுக்கு அரசியல் தடை

தாய்லாந்தில் நேற்று வெள்ளிக்கிழமை இராணுவத்தின் தலைமையிலான பாராளுமன்றத்தில் முன்னால் பிரதமர் யின்லுக் சினாவத்ரா மீது குற்ற விசாரணை மேற்கொள்ளப் பட்டுள்ளது.


மேலும் சினாவத்ரா அரசியலில் ஈடுபட 5 ஆண்டு தடையும் விதிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் தாய்லாந்தின் முதல் பெண் பிரதமரான சினாவத்ரா தாய்லாந்து வரலாற்றிலேயே அந்நாட்டு பாரளுமன்றத்தால் குற்ற விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ள முதல் பிரதமராகவும் மாறியுள்ளார்.

சினாவத்ரா பிரதமாரகக் கடமையாற்றிய சமயத்தில் விவசாயிகளுக்கு அரிசிக்கு சந்தை விலையை விடக் கூடுதல் விலை கொடுத்தது அரசுக்குப் பல கோடி இழப்பு ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே பாராளுமன்றத்தில் குற்ற விசாரணை நடந்ததுடன் இதில் அவர் நேரில் ஆஜராகி வாக்கு மூலம் அளித்தும் இருந்தார். இதன் போது அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்ததுடன் அரிசித் திட்டம் பொருளாதார முன்னேற்றத்துக்காகவே என வாதிட்டார். இதையடுத்து சினாவத்ரா மீதான குற்ற விசாரனை தொடர்பில் ஓட்டெடுப்பு நிகழ்ந்தது. இதில் 220 எம் பிக்களில் 190 பேர் சினாவத்ராவுக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் அவரது குற்றம் நிரூபணமாகி அவர் அரசியலில் ஈடுபட 5 ஆண்டு தடை விதிக்கப் பட்டுள்ளது.

மேலும் இவர் மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரப் படும் பட்சத்தில் குற்றச்சாட்டு நிரூபிக்கப் பட்டால் குறைந்தது 10 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 47 வயதுடைய யின்லுக் சினாவத்ரா கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாய்லாந்தின் பிரதமராகப் பதவி ஏற்றார். ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் போன்ற காரணங்களால் அவர் கடந்த வருடம் மே மாதம் 7 ஆம் திகதி பதவி இறக்கப் பட்டார். பெயு தாய் கட்சியின் உறுப்பினரான இவர் கடந்த 60 வருடங்களில் பதவி வகுத்த தாய்லாந்தின் மிக இளம் வயதுப் பிரதமரும் ஆவார்.

Related Posts:

«